வள்ளலார் மன்றத்தில் அவதார தினம்
ADDED :2182 days ago
சங்கராபுரம்; சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வள்ளலார் அவதார தினம் நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். சன்மார்க்க இளைஞரணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன்,சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மன்ற பூசகர் சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது.சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் சன்மார்க்க கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் டாக்டர் நாச்சி யப்பன், சூரியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.