ஆண்கள் மட்டும் முளைப்பாரி தூக்கி வழிபாடு
ADDED :1817 days ago
கமுதி : பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் புரட்டாசி முளைப்பாரி திருவிழா நடந்தது. கிராம மக்கள் 10 நாட்களுக்கும் மேலாக காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்தாண்டு பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழித்து அதிக மகசூல் கிடைக்கவும், கொரோனாவில் இருந்து அனைவரும் பூரண குணமடைய வேண்டி ஆண்கள் மட்டும் முளைப்பாரி துாக்கி பசும்பொன் கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.