இருமனம் இணையட்டும்
ADDED :1957 days ago
நபிகள் நாயகத்திடம் ஒருவர் தனக்கு திருமணம் நடக்க போவதாக தெரிவித்தார்.
‘‘பெண் பார்த்து விட்டீர்களா?” எனக் கேட்க அதற்கு ‘‘இல்லை’’ என்றார்.
‘‘முதலில் பெண்ணைப் பாருங்கள். பின் அவளுடன் பேசி திருமணத்திற்கு சம்மதமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களிடையே புரிதல் ஏற்பட்டு அன்பு மேலோங்கும்’’ என்றார்.
மற்றொரு சமயத்தில் ஒரு பெண், ‘‘கட்டாயப்படுத்தி பெண்ணை திருமணம் செய்ய மார்க்கத்தில் அனுமதியுண்டா?’’ என சந்தேகம் கேட்டாள்.
‘‘கன்னி பெண்ணோ, விதவை பெண்ணோ எப்படி இருந்தாலும் அனுமதி கேட்காமல் திருமணம் செய்யக் கூடாது’’ என்றார்.
இருமனம் இணைந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.