உயர்ந்த மனிதர்கள்
ADDED :1837 days ago
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிலிப். ஒருமுறை இவரது பணம் திருடு போனது. இது பற்றி அவரிடம் விசாரித்த போது, ‘‘ எனக்கு இல்லாத கவலை உங்களுக்கு ஏன்? என் சட்டையில் இருந்த பணத்தை தான் திருடன் எடுத்துள்ளான். என் வங்கி கணக்கிலோ, வீட்டிலோ இருந்த பணத்தையோ எடுக்கவில்லை. மேலும் திருடியவன் கண்ணியமானவன். எனக்கு தெரியாமல் நாசூக்காக திருடியிருக்கிறான். மிரட்டவோ, அச்சுறுத்தவோ இல்லை. ஒருவேளை நான் பணத்தை தர மறுத்திருந்தால் அவன் என்னைக் கொன்றிருக்கலாம். அப்படி ஆபத்து வராமல் ஆண்டவர் காப்பாற்றியதற்கு நன்றியுடன் ஜெபிக்கிறேன். அதனால் இழந்த பணத்தை எண்ணி வருந்தவில்லை’’ என்றார். இப்படி தீமையிலும் நன்மை பற்றி சிந்திப்பவரே உயர்ந்த மனிதர்கள்.