சென்றாய பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடல்
ADDED :1851 days ago
நங்கவள்ளி: நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாய பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலில், சில மாதமாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், வரும், 19 காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் கும்பாபி?ஷகம் நடக்க உள்ளது. அதற்காக, தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட பணி முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, முகூர்த்தகால் ஊன்றும் விழா நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் முகூர்த்தக்காலுக்கு பக்தர்கள் பொட்டு வைத்து பூஜை செய்தனர். கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.