விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1869 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நேற்று பிரதோஷம் என்பதால், கோயிலில் நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.