காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை
ADDED :1883 days ago
சூலூர்: காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு விழா நேற்று துவங்கியது. சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கார்த்திகை மாதப்பிறப்பை ஒட்டி மண்டல மகர விளக்கு பூஜை நேற்று துவங்கியது. உதயாஸ்தமன பூஜையுடன் பூஜையுடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். வரும், டிச., 20 ம்ததேதி அகண்ட நாம ஜபமும், பறையெடுப்பு மற்றும் அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.