உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

ஆழ்வார்குறிச்சி கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வடக்குவாசெல்வி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று கால்நாட்டுதல் வைபோகத்துடன் துவங்கியது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம்  தென்காசி மெயின்ரோட்டில் கார்கார்த்த வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடக்குவாசெல்வி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நேற்று கால்நாட்டுதல் வைபோகத்துடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 5ம் தேதி காலை மங்களஇசை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவாசனம், எஜமான் அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், மகாலெஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் தீர்த்தசங்கரகணம், வாஸ்துசாந்தி, பிரேசபலி, அங்குரார்பணம், எஜமானவர்ணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேஷம் நடக்கிறது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை, வேதபாராயணம், திருமலைபாராயணம் நடக்கிறது. இரண்டாம் நாளான 6ம் தேதி காலை 8 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மேல் 3ம்கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்ப்பணம் நடக்கிறது. 7ம் தேதி காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 10.35 மணிக்கு மேல் 11 மணிக்குள் விமான கோபுர அபிஷேகம், வடக்குவாசெல்வி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை கீழாம்பூர் சங்கரசுப்பிமணிய குருக்கள் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கார்கார்த்த வேளாளர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !