உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு சபரிமலை நடை புதன் கிழமை திறப்பு!

பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு சபரிமலை நடை புதன் கிழமை திறப்பு!

சபரிமலை: அய்யப்பன் சிலை பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, சபரிமலை கோவில் நடை, நாளை மறுநாள் (30ம் தேதி) மாலை திறக்கப்படும். மறுநாள், பிரதிஷ்டா தின நிகழ்ச்சிகள் முடிந்து அன்றிரவு நடை அடைக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், அய்யப்பன் சிலை பிரதிஷ்டா தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான நிகழ்ச்சிகளுக்காக, கோவில் நடை நாளை மறுநாள் (30ம் தேதி) மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நடையை திறப்பார்.அன்றைய தினம் வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள் (31ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளான, காலை, உச்சிக்கால, இரவு பூஜைகள் நடக்கும். இது தவிர, சிறப்பு பூஜைகளான, படி பூஜை, உதயாஸ்தமன பூஜையும் இருக்கும். பக்தர்கள் சுமந்து வரும் நெய்யினால் மூலவருக்கு அபிஷேகமும் நடைபெறும். பிரதிஷ்டா தின பூஜைகள் முடிந்து, அன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து, ஆனி மாத பூஜைகளுக்காக, அடுத்த (ஜூன்) மாதம் 14ம் தேதி மாலை நடை மீண்டும் திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !