சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்
ADDED :1977 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த கந்தசஷ்டி விழாவில் சுப்ரமணிய சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது
ஸ்ரீமுஷ்ணம் திருக்குளக்கரையில் உள்ள பிரகந்நாயகி சமேத நித்தீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 6 நாட்களாக நடந்தது. விழாவையொட்டி தினமும் அபிேஷக ஆராதனை நடந்தது. 7ம் நாள் விழாவில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்ச வம் நடந்தது. சுவாமிதிருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உடுமலை செந்திலின் கந்தசஷ்டி கவச நடன நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை ஜெய்சங்கர் குருக்கள், ரவி சுந்தர் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.