குன்றத்து ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்த வசதி
ADDED :2107 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலை கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இருமுடி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகி கைலாசநாதன் தெரிவித்தார். கொரோனா தடையுத்தரவால் கேரளா ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வயதானவர்கள், ஐயப்பன் கோயிலுக்கு கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என விரும்பமுள்ள பக்தர்கள் இருமுடி கட்டி இக்கோயிலில் இருமுடி செலுத்தலாம்.பக்தர்களுக்காக சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். விபரங்களுக்கு 94437 23085ல் தொடர்பு கொள்ளலாம் என கைலாச நாதன் தெரிவித்தார்.