உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடியில் அய்யா வைகுண்டரின் அன்பு வழி மாநாடு

தூத்துக்குடியில் அய்யா வைகுண்டரின் அன்பு வழி மாநாடு

தூத்துக்குடி : அய்யா வைகுண்டரின் அருள்நெறி அன்பு வழி மாநாடு தூத்துக்குடியில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அய்யா வழி அன்பு கொடி மக்களின் சார்பில் அய்யா வைகுண்டரின் அருள்நெறி அன்பு வழி 5வது மாநாடு தூத்துக்குடியில் நடந்தது. மாநாட்டினை முன்னிட்டு அகிலதிரட்டு கருத்தரங்கம், கருத்து பரிமாற்றம், அய்யாவழி சொற்பொழிவுகள் நடந்தது. மாலையில் காவிக் கொடி பேரணி நடந்தது. பேரணிக்கு சிவசந்திரன் தலைமை வகித்தார். அனைத்து பதிகளின் பணிவிடையாளர்கள் முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணன் தலைமையில் விஜயஅச்சம்பாடு மற்றும் ஒட்டநத்தம் சிறுமியர்களின் கோலாட்டம் நடந்தது. பின்னர் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சியும் நடந்தது. மாநாட்டில் ஏராளமான அய்யா வழி அன்புக் கொடி மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !