உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதியில்லை

பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதியில்லை

திண்டுக்கல்:பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கலாம். தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை என திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியது: பழநி முருகன் கோயிலில் நவ.23 முதல் நவ.29 வரை திருக்கார்த்திகை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறப்பு 4:30 மணிக்கு விளாபூஜை மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை மாலை 6:05 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருஆவினன்குடி பெரியநாயகியம்மன் கோயில்களிலும் தீபம் ஏற்றுதல் நடக்கும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கார்த்திகை நிகழ்வுகள் டிவி. பேஸ்புக் யூ டியூப்பில் ஒளிபரப்பப்படும். நவ.29 அதிகாலை 4:00 முதல் மதியம் 12:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது www.tnhrce.gov.in ல் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !