உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழா: பந்தக்கால் முகூர்த்தம்

திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழா: பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்கால்:  திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் அமைச்சர் கமலக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.  இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா தொடங்குவதற்ககாக பூர்வாங்கப் பணிகள் தொடக்கமாக பந்தல்கால் முகூர்த்தம் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சர் கமலக் கண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !