உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலையில் திருக்கார்த்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்

சுவாமிமலையில் திருக்கார்த்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்

தஞ்சாவூர் : திருக்கார்த்திகை முன்னிட்டு, கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாதசுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, உள்ள சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயில், திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை முதல் மாலை வரை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் மற்றும் உற்சவர் சண்முக சுவாமியை தரிசனம் செய்தனர். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !