பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1772 days ago
புதுச்சத்திரம்; பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் கோவில் பிரகாரத்தில் உலா வந்தார். இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், வினாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சேத்தியாத்தோப்புசேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் கார்த்திகை, பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் வீரசக்தி ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது.