ராமலிங்கேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :1771 days ago
திம்மராஜம்பேட்டை: ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேக விழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கார்த்திகை மாத மூன்றாவது சோமவார தினத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 4:00 மணிக்கு சங்கல்பம்; சிறப்பு ஹோமம் நடந்தது.மாலை, 5:00 மணிக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவனை வழிபட்டு சென்றனர்.இக்கோவிலில், பிரதோஷ காலங்களில், அம்பாளுடன் பிரதோஷ மூர்த்தி, கோவில் வளாகத்திற்குள் வலம் வருவார்.இந்நிலையில், நன்கொடையாளர் ஒருவர், புதிய திருக்குடை செய்து, கோவில் நிர்வாகத்திடம், நேற்று ஒப்படைத்தார்.