திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண உற்சவம்
ADDED :2109 days ago
திருத்தணி : திருத்தணியில், கிருஷ்ணர் கல்யாண உற்சவம் நடந்தது. திருத்தணி --- அரக்கோணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், ஒவ்வொரு மாதமும், கிருத்திகை முடிந்து, மறுநாள் கல்யாண உற்சவம் நடந்து வருகிறது.அந்த வகையில், நேற்று, கிருஷ்ணர் கல்யாண உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. இதில், உற்சவர் கிருஷ்ணருக்கு, பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதைத் தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதன்பின் நடந்த, கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.