உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,008 விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு

1,008 விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு

 பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே ஆயிரத்தெட்டு தீபங்கள் ஏற்றி, கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது.

துடியலுார் அருகே ஸ்ரீவத்சா கார்டன் குடியிருப்பு வளாகத்தில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கார்த்திகை தீப விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொதுவான விளையாட்டு மைதானத்தில், முறைப்படுத்தப்பட்ட வடிவமைப்பில், 1,008 தீபங்களை ஏற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளாகத்தில் உள்ள ஸ்ரீவத்சா கார்டன் அசோசியேஷன் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !