செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1866 days ago
நத்தம் : நத்தம் அருகே காரைக்குண்டு கிராமத்தில் செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ேஹாமம், விக்னேஷ்வர பூனை, பூர்ணாகுதி உள்ளிட்ட முதல்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, தேவபாராயணம் உள்ளிட்ட இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது.கடம் புறப்பாடை தொடர்ந்து பல்வேறு தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றம் தீபாராதனை நடந்தது. திரளானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.