உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 17 -18ம் நுாற்றாண்டு செப்பேடு மதுரையில் கண்டெடுப்பு

17 -18ம் நுாற்றாண்டு செப்பேடு மதுரையில் கண்டெடுப்பு

மதுரை: மதுரை கருமாத்துார் அருகே கரிசல்பட்டியில் 17 - 18ம் நுாற்றாண்டை சேர்ந்த 40 வரிகள் கொண்ட செப்பேடு ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கண்டெடுத்து உள்ளார்.

அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் இருந்து திடியன் செல்லும் பழைய வணிக சாலையில் கரிசல்பட்டி உள்ளது. இவ்வூரில் உள்ள சோலை (எ) வீரபுத்திரரிடம் செப்பேடு இருப்பதை அறிந்து ஆய்வு செய்தேன். ஒரு அடி நீள அகலமுள்ள செப்பேட்டை அவர் பூஜை அறையில் வைத்து பாதுகாத்துள்ளார். இச்செப்பேட்டில் கருமாத்துார் கலியுக சிதம்பரேஸ்வரர் கோயில் ஏற்கனவே இருந்த கருவறைக்கு முன் புதிய மண்டபம் கட்ட ஒப்பந்தம், கோயில் உரிமைகள், கண்ணனுார், கருமாத்துார், வடக்கம்பட்டி, விக்கிரமங்கலம், பெருமாள் கோயில்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நியமன காவலாளி குறித்த குறிப்பு உள்ளன. பல தகவல்கள் அடங்கிய இச்செப்பேட்டை வெகுதானிய ஆண்டு மாசி மாதம் 27ம் தேதி தேவங்க பெருமாள் என்பவர் எழுதியுள்ளார். சாட்சி இருந்தவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !