அய்யப்பன் கோவிலில் 108 கலச அபிஷேகம்
ADDED :1862 days ago
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் அய்யப்பன் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 கலச அபிஷேகம் நடந்தது. கடலுார் மஞ்சக்குப்பம் சாலைக்கரை மாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்பன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், கொரோனா நோயில் இருந்து மக்கள் விடுபடவும் வேண்டி கணபதி ேஹாமம், 108 கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.