உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாணிப்பாறையில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூடினர். வனத்துறை, ஹிந்து அறநிலைய துறையினர் பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மலையேறினர். பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !