வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காப்பு கட்டுதல்
ADDED :1837 days ago
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று காலை 7மணியளவில் மண்டல பூஜையை முன்னிட்டுகோயில் வளாகத்தில் காப்பு கட்டுதல் நடந்தது.
மூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்சள்மாத உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது.அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சாமி செய்திருந்தார். முகக்கவசம் அணிந்தவாறு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.டிச., 26 மண்டல பூஜைகள் நடக்க உள்ளது. இந்தாண்டு பேட்டை துள்ளல், சுவாமி புறப்பாடு வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.