உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மாதம் துவக்கம்: பக்தி பாடல் திருவீதி உலா

மார்கழி மாதம் துவக்கம்: பக்தி பாடல் திருவீதி உலா

கிருஷ்ணராயபுரம்: மார்கழி மாதத்தை முன்னிட்டு, லாலாப்பேட்டையில் சிவ பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி திருவீதி உலா வந்து சிறப்பு பூஜை செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் சிவனாடியார் குழுவினர் உள்ளனர். மார்கழி மாதத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை காவிரி ஆற்றில் குளித்து விட்டு செம்போர்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில் வழிபாடு செய்து முக்கிய வீதிகளில் மணிக்கவாசகர், திருநாவுக்கரசர், அப்பர், சுந்தர் ஆகிய நால்வர் பாடிய பாடல்களை பாடினர். நிறைவில் கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !