உப்பில்லாத கொழுக்கட்டை
ADDED :1792 days ago
நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள செண்பகராமன் புதுார் அவ்வையார் கோயில். முதிய வடிவில் கையில் ஊன்றுகோல் பிடித்த நிலையிள்ள அருள்புரியும் அவ்வையாருக்கு அரிசிமாவு கொழுக்கட்டையும், கூழும் படைத்து வழிபடுகின்றனர். திருமணத்தை தவிர்த்து இளம்வயதிலேயே முதுமையை விநாயகரிடம் வேண்டிப் பெற்றவர் அவ்வையார். இதனால் இவருக்கு படைக்கும் கொழுக்கட்டையில் உப்பு சேர்க்கும் வழக்கம் கிடையாது. தனக்கு கிடைக்காத இல்லற வாழ்வை தன்னை வழிபடும் பக்தருக்கு வரமாக அளிக்கிறார் அவ்வையார் அம்மன்.