பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான்: திருநள்ளாறில் கோலாகலம்
ADDED :1768 days ago
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி இன்று நடந்தது.
அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சனீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட 27 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நவரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானுக்கு மகா தீபாரதனை நடந்தது. நளன் குளத்தில் குளிக்க தடைகொரோனா தொற்று காரணமாக நளன் குளத்தில் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூட்டத்தை ண்காணிக்க தேரடிவீதி உள்பட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட நவீன கேமரா பொருத்தப்பட்டிருந்தது.