உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனோர் அம்மனோர் திருவிழா எளிமையாக கொண்டாட்டம்

அய்யனோர் அம்மனோர் திருவிழா எளிமையாக கொண்டாட்டம்

கோத்தகிரி: கோத்தகிரியில் அய்யனோர் அம்மனோர் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் பழங்குடியினர் மக்களின் குலதெய்வமான அய்யனோர் அம்மனோர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கடந்த, 14ம் தேதி விழா  துவங்கியது. இவ்விழாவை ஒட்டி, கோத்தகிரி நேரு பூங்கா அருகில் அமைந்துள்ள கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பாதுகாப்பு கருதி ஊர்வலம் மற்றும் பாரம்பரிய  ஆடல் பாடல் நிகழ்சிகள் தவிர்க்கப்பட்டு, எளிமையாக கொண்டாடப்பட்டது. குலதெய்வம் கோவிலுக்கு வந்த பூசாரி உள்ளிட்ட சிலர், சிறப்பு பூஜையை முடித்துவிட்டு, கிராமத்தில் உள்ள கோவிலுக்குச்  சென்றனர். கிராமத்தில் உள்ள கோவிலிலும் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. கலாச்சார உடையணிந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை, புதுகோத்தகிரி  கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !