5,000 பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி
சபரிமலை : கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலம் முடிந்த நிலையில், மகர விளக்குக்காக நாளை மாலை, மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
மண்டல காலத்தில், நிலக்கல்லில் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையம், மகரவிளக்கு காலத்தில் செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் அல்லது வரும் வழியில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் சபரிமலை வரவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில், நாளை மறுதினம் முதல், தினமும் 5,000 பக்தர்களுக்கு, தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு, நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.
திருக்காஞ்சி தல வரலாறு நுால் வெளியீட்டு விழா வில்லியனுார்; தீராத வினைகள் தீர்க்கும் திருக்காஞ்சி திருத்தலம் என்ற கோவில் தலவரலாறு நுால் வெளியீட்டு விழா நடந்தது. வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் காசிக்கும் வீசம் மிகுந்த கெங்கவராத நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தொன்மை, பராம்பரியம், அரிய தகவல்களை மக்கள் அறியும் வகையில் தீராத வினைகள் தீர்க்கும் திருக்காஞ்சி திருத்தலம் என்ற தல வரலாற்று நுாலை ரமேஷ் எழுதி உள்ளார்.இந்த நுால் வெளியீட்டு விழா நேற்று மாலை, கோவில் வளாகத்தில் நடந்தது.சபாநாயகர் சிவக்கொழுந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ., ஆகியோர் நுாலை வெளியிட்டனர்.நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கர், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பெருங்குளம் திருக்கயிலாய ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சார்யா, பிள்ளையார்பட்டி வேத சிவாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சார்யார், காரைக்கால் கண்ட வித்யாபீட ஸ்தாபகர் பால சர்வேஸ்வர சிவாச்சார்யார், கண்ணபிரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.ஆலய தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சார்யார் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.