சாய்பாபா கோவிலில் மஹா சண்டி ேஹாம விழா
ADDED :1741 days ago
திருப்பூர் : அவிநாசியிலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், மஹா சண்டி ேஹாம விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.அவிநாசி, கோவை பைபாஸ் ரோடு அருகிலுள்ள ஸ்ரீ ஷீரடி சாயிபாபா கோவிலில் மஹா சண்டி ேஹாம விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை கணபதி ேஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மாலை திருவிளக்கு பூஜை, இரவு, 64 யோகினி, பைரவர் பலிதானம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு மஹா சண்டி ேஹாமம், சுமங்கலி பூஜை, அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து சாய் மஹானுக்கு, சிறப்பு மங்கல ஆரத்தி, கூட்டு வழிபாடு நடக்கிறது.