உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் புத்தாண்டு தரிசனம்: குவிந்த பக்தர்கள்

கோவில்களில் புத்தாண்டு தரிசனம்: குவிந்த பக்தர்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சந்தணக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 6:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. மன்னீஸ்வரர் கோவிலில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நடந்தது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சமூக இடைவெளி விட்டு பெருமாளை தரிசித்தனர். கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில், குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !