திருவாடானை கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :1892 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் மார்கழி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.