திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா நடக்குமா? எதிர்பார்ப்பில் பக்தர்கள்
ADDED :1756 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆண்டுதோறும் தை மாதம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் இத்திருவிழா நடக்கும். இந்தாண்டு ஜன., 28ல் இவ்விழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். விழா துவக்கமாக சில நாட்களுக்கு முன் தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது. ஜன.,15ல் கொடியேற்றம் நடக்கவுள்ளது. தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. அரசு அனுமதி கிடைத்தால் தெப்பத்திற்கு சுவாமி புறப்பாடு நடக்கும். இல்லையெனில் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு மட்டும் நடத்தப்படும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.