உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 21 அடி உயர ஆஞ்ஜநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

21 அடி உயர ஆஞ்ஜநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

 புதுச்சேரி : கொம்பாக்கத்தில், 21 அடி உயர ஆஞ்ஜநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

கொம்பாக்கத்தில் உள்ள வேங்கடாசலபதி கோவிலில் 8ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் உள்ள 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்ஜநேயருக்கு 1008 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் அபிஷேகம்  நடந்தது. விசேஷ அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !