நாம் கடவுளின் பிள்ளைகள்
* நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் சாதிக்கும் வலிமை நமக்குண்டு.
* பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் முன்னேற முடியாது.
* உடல், மனதை பலவீனப்படுத்தும் எதையும் தொட வேண்டாம்.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகளே நமக்குத் தேவை.
* சோம்பேறித்தனத்தை துரத்திட முயற்சி செய்யுங்கள்.
* தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுளிடம் நம்பிக்கை ஏற்படாது.
* துருப்பிடித்து தேய்வதை விட உழைத்துத் தேய்வதே மேலானது.
* கோழையாக இருப்பவன் கூட விடாமுயற்சியால் வீரனாக மாற முடியும்.
* வாழ்க்கையில் லட்சியத்தோடு செயல்படுங்கள்.
* நல்ல வழியில் பணம் சேர்ப்பதும், அதை சமுதாயத்திற்கு செலவிடுவதும் சிறந்த வழிபாடு.
* அறிவு நுட்பமாகும் போது தான் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.
* வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இயற்கையின் நியதி.
* பிறரது ஏளனப் பேச்சை பொருட்படுத்தாதீர். கடமையைக் கண்ணாக போற்றுங்கள்.
* சுய கட்டுப்பாடு இருந்தால் மகத்தான சாதனை படைக்க முடியும்.
* அறிவுத் தேடல் இருந்தால் தீமையிலிருந்தும் பாடம் கற்கலாம்.