நற்பண்பை தேடுங்கள்
                              ADDED :1746 days ago 
                            
                          
                           
பணத்துக்காக சிலர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். படிப்பதன் நோக்கமே பணம் சம்பாதிப்பது தான் என உலகம் மாறி வருகிறது. தேவைக்கும் அதிகமாக பணம் சம்பாதிக்கும் போது  குடி, விபசாரம் போன்ற வழிகளில் மனம் செல்லும். விருந்து, கேளிக்கை என ஆடம்பரத்தில் நாட்டம் ஏற்படும். தற்காலத்தில் ‘சாட்டிங்’ என்ற பெயரில் சீரழிகின்றனர். இறுதி காலத்தில் மனம், உடல் நோய்களுக்கு ஆளான பிறகு, ‘இறைவா! என்னைச் சோதிக்கிறாயே’ எனக் கதறுகின்றனர்.      
‘‘ மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இறைவன் இழைப்பதில்லை.  தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றனர்’’ என்கிறது குர்ஆன். பணத்தின் மீதான பற்றைக் குறைத்து நண்பண்புடன் வாழ்ந்தால் நிம்மதி நிலைக்கும்.