ஏழைகளை அவமதிக்காதீர்!
ADDED :1814 days ago
இறைவனின் முன் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. வறுமையில் வாடும் ஒருவரை கண்டு ஏளனம் செய்வதோ, அவமதிப்பதோ கூடாது. இப்படி செய்தால் என்னாகும்?
“ஏழைகளை ஏளனமாகவும், கேவலமாகவும் நினைப்பவர்கள், அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள் அல்லது செய்யாத தவறுக்காக தண்டிப்பவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாவர். அவர்களுக்கு மறுமை நாளில் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்’’ என எச்சரிக்கிறார் நாயகம்.
ஏழைகளையும் மனிதர்களாக மதிக்க வேண்டும். அவர்களுக்கு முடிந்த பொருள் உதவிகளைச் செய்ய வேண்டும்.