உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் கண்டு மகிழ்ந்தால்...

துன்பம் கண்டு மகிழ்ந்தால்...


பிடிக்காத ஒருவருக்கு துன்பம் வந்தால் நாம் சந்தோஷப்படுகிறோம். ‘‘ஆஹா...நேற்று வரை என்ன ஆட்டம் போட்டான்! இப்போது சிக்கிக் கொண்டானா? போன வருஷம் என்னை அடிக்க கை ஓங்கினானே! இந்த வருஷம் ஆக்சிடென்டில் கையையே இழந்து விட்டான். தக்க தண்டனை கிடைத்து விட்டது’’  என யாரும் மகிழ்வது கூடாது.
நமக்கு துன்பம் செய்பவர்களுக்கு தண்டனையளிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அதற்காக சந்தோஷப்படும் உரிமை நமக்கு தரப்படவில்லை.  தவறு செய்தவன் உணரும் காலம் வரும் வரை பொறுமை காக்க வேண்டும்.
‘‘உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே. இல்லாவிட்டால் நீ துன்பத்தில் சிக்கிக் கொள்வாய்’’


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !