இயற்கை சொல்லும் பாடம்
ADDED :1825 days ago
அன்னதானம் செய்வதாக இருந்தால் அது குறித்த அறிவிப்பில் தனி நபர்களின் பெயர்கள் இடம் பெறக் கூடாது.
‘‘தர்மம் ரகசியமாக இருக்கட்டும் வலதுகை செய்வதை இடதுகைக்கு தெரியாதிருக்கட்டும்’’ என்கிறது பைபிள். இதைக் கடைபிடிப்பவரின் தர்மமே ஏற்கப்படும்.
காலையில் சூரியன் உதிக்கிறது. மழை பொழிகிறது. மரங்கள் பழங்களைத் தருகின்றன. பூக்கள் நறுமணத்தை தருகின்றன. உப்பு ருசி தருகிறது. இப்படி இயற்கை எல்லாம் உதவுகின்றன. அவை தங்களின் தியாகம் குறித்தோ, சேவை குறித்தோ தற்பெருமை கொள்வதில்லை.
இவை சொல்லும் பாடம் என்ன தெரியுமா... ஆரவாரமின்றி தர்மம் செய்ய வேண்டும் என்பதே.