உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தாலே யோகம்

பார்த்தாலே யோகம்


. ஒருவரின் ஜாதகத்தை கணித்து பலன்களை நவகிரகங்களின் இருப்பிடத்தைக் கொண்டே ஜோதிடம் கூறுகிறது. இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என்று வாழ்வின் அனைத்தும் கிரகங்களின் பெயர்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. ஒன்பது நவக்கிரகத்திற்கும் கதாநாயகன் சூரியன். நட்சத்திரங்களில் ஒன்று என விஞ்ஞானிகள் சொல்ல, ஜோதிடர்களோ அதை கிரகமாக பார்க்கின்றனர். ராசிகளில் சிம்மத்தின் அதிபதியாக இருக்கும் சூரியன், மேஷ ராசியில் செல்லும் போது உச்சபலத்தை பெறுகிறார். இதனை ‘அக்னி நட்சத்திரம்’ என்பர். சூரியனின் நிலையை வைத்தே ஒருவரின் உடல்நலம், ஆன்ம பலம், ஆன்மிக யோகத்தை அறியலாம். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நெருங்கிய நண்பர்கள். இக்கிரகங்களுடன் சூரியன் இருந்தாலும் அல்லது அவர்களை பார்த்தாலும் யோகம் ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !