உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்

மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்

 மதுரை : மதுரை மாவட்டத்தில்நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மதுரை கருப்பாயூரணிராயல் கார்டன் குடியிருப்போர் சங்கம் சார்பில்ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லீம்கள் இணைந்து கொட்டும் மழையிலும் சமத்துவ பொங்கல் வைத்தனர். உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்தி பங்கேற்றார்.அவர் பேசுகையில், மக்கள் இதுபோல ஒற்றுமையுடன் மேலும் பல ஆண்டுகளுக்கு தமிழர்பாரம்பரியத்தை பறைசாற்றும் விதம் கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும், என்றார். சங்க செயலாளர் மலைச்சாமி, தலைவர் ஆசைதம்பி, பொருளாளர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மஹாருத்ர மஹாயக்ஞ கமிட்டி சார்பில் தத்தனேரி மயான ஊழியர்களுக்கு பொங்கல் புத்தாடைகளை தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை பொதுசெயலாளர் அமுதன் தலைமையில் சேதுவெங்கட்ராமசர்மா, சேதுராம சர்மா வழங்கினர்.* கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர்செல்லத்துரை தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.* சின்ன ஊர்சேரி காப்பகத்தில் நடந்த விழாவிற்கு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மணிமேகலை, இல்ல நிர்வாகி எட்வின் ஐசக், பொறுப்பாளர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* புதுாரில் இலக்குவனார் மனநல மருத்துவமனையில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் செல்வமணி தினகரன் தலைமை வகித்தார். ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்மார்ட் லேப் செந்தில் நன்றி கூறினார்.* ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொங்கல் விழா, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா, அய்யன் திருத்தொண்டர் திருநாவுக்கரசர் விழா கொண்டாடப்பட்டது.

சுவாமி சிவயோகானந்தா ஆசி வழங்கினார். மாநில அமைப்பாளர் சுடலைமணி, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கதலிநரசிங்கபெருமாள், நிர்வாகி கிருஷ்ணா, மாவட்ட தலைவர் மாரிசெல்வம், செயலாளர் செல்வநாயகம் பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம்* திருப்பரங்குன்றம்பாரம்பரிய மலர்கள் மகத்துவ மைய விழாவில்தோட்டக்கலை உதவி இயக்குனர் பேபி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் காசிநாதன், துணை வேளாண் அலுவலர் பாஸ்கர்ராஜா மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.மேலுார்* மேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் டி.எஸ்.பி., ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், காஞ்சனா தேவி, தனிப்பிரிவு போலீசார் முத்துக்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர். போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர். திருமங்கலம்* நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.செயலாளர் அறிவொளி முன்னிலை வகித்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை டி.எஸ்.பி., வினோதினி வழங்கினார்.* ஊராட்சி ஒன்றிய அலுவலக விழாவில் தலைவர் லதா தலைமை வகித்தார். துணை தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், சங்கர்கைலாசம் மற்றும்கவுன்சிலர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பாலமேடு-* ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் முருகேசன் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் துணை மேலாளர் அருண்குமார், ஊழியர்கள் ஸ்ரீராம், தனசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் விழா நடந்தது. எஸ்.ஐ.,க்கள் வெற்றிவேல், ஜெயமணி, போலீசார் செல்வகுமார், சாந்தகுமார், கனகராஜ் பங்கேற்றனர்.* சமயநல்லுாரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் நடந்த விழாவில் எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணியன், ஒயிலரசன்,முத்துபாண்டி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.* சோழவந்தான் மற்றும் காடுபட்டியில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் விழா நடந்தது. எஸ்.ஐ.,க்கள் விஜயபாஸ்கர், ராஜா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !