ராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர நிதி சமர்ப்பண துவக்க விழா
மதுரை: மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர நிதி சமர்ப்பண துவக்க விழா தியாகராஜர் கல்லுாரியில் நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடலரசன் தலைமை வகித்தார். வி.எச்.பி., தென் மாநில அமைப்பாளர் சேதுராமன் வரவேற்றார். சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்கினார்.மாநில நிதிக்குழு தலைவர் கருமுத்து கண்ணன் ரசீது வெளியிட்டு துவக்கி வைத்தார். நிதி வழங்கிய ஏழு பேருக்கு ரசீது வழங்கப்பட்டது. வி.எச்.பி., ேஷத்ர அமைப்பாளர் நாகராஜன், ஆர்.எஸ்.எஸ்., மக்கள் தொடர்பு இணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோட்ட இணை செயலாளர் சேகர் நன்றி கூறினார்.ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூறியதாவது: ராம்ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர சார்பில் அயோத்தியில் 2.70 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 360 அடி நீளம், 235 அடி அகலத்தில் ஐந்து மண்டபங்கள், மூன்று நிலைகளுடன் ராமபிரான் கோயில் அமையவுள்ளது.மக்கள் பங்களிப்புடன் கோயில் அமைக்கதீர்த்த ேஷத்ர திட்டமிட்டுள்ளது. அதற்காக நிதி சமர்ப்பணம் நிகழ்ச்சி பிப்., 28 வரை நடக்கவுள்ளது என்றனர்.