தானம் செய்வோர் கவனிக்க...!
ADDED :2044 days ago
அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவம் கூட நீங்கி விடும்/ ஆனால், பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சியவன மகரிஷி, ‘எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும்’என சொல்லியுள்ளார். ‘அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்’ என காஞ்சிமகாபெரியவர் வேண்டுகிறார்.