உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் தேர் திருவிழா ஒத்தி வைப்பு

பொள்ளாச்சி மாரியம்மன் தேர் திருவிழா ஒத்தி வைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபடுவர். தேர்த்திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் திரள்வார்கள். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக  இந்த ஆண்டு தேர் திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக, கோயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !