திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா: பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
ADDED :1817 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஆறாம் நாளான நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
கோயிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள், சிவிலி நாயகர், திருஞான சம்பந்தர் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து, புராண கதையை கோயில் ஓதுவார் கூறினார். வழக்கமாக இந்நிகழ்ச்சியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்திய கிரீஸ்வரர், பிரியாவிடை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை 16 கால் மண்டபம் முன் எழுந்தருள விழா நடக்கும்.கொரோனா தடை உத்தரவால் நேற்று கோயிலுக்குள் நடத்தப்பட்டது.