மருதமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.65 லட்சம்
ADDED :1822 days ago
வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.
பொது உண்டியலில், 56 லட்சத்து, 4 ஆயிரத்து, 703 ரூபாயும், 64 கிராம், 280 மில்லி கிராம் தங்கமும், 2,870 கிராம் வெள்ளியும் இருந்தது.உண்டியல் எண்ணிக்கையின் போது, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா, கோவை உதவி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். திருக்கோவில் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள், இரவு நேரம் ஆகிவிட்டதால், திருப்பணி, கோசாலை, அன்னதான உண்டியல்கள் எண்ணப்படவில்லை. அடுத்த உண்டியல் எண்ணிக்கையின் போது, எண்ணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.