அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை
ADDED :1718 days ago
புதுச்சேரி; அப்பா பைத்தியம் சுவாமிகளின் குரு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கோரிமேடு வீமகவுண்டன்பாளையத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் குரு பூஜை நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு திருவிளக்கு, புனித நீர், விநாயகர் வழிபாடுகளுடன் பூஜைகள் துவங்கின. தமிழில் வேள்வி வழிபாடு நடந்தது.தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகமும், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட திருக்குட நீரால் அபிேஷகமும் நடந்தது.மலர் போற்றி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. என்.ஆர். காங்., கட்சி தலைவர் ரங்கசாமி வழிபாடு நடத்தினார். குரு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.