முதல் பட்ட ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திர விழா
ADDED :1720 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் முதல் பட்ட ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திர விழா நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர் மடத்தில் ஸ்தாபகரான ஸ்ரீமத் லஷ்மனார்ய ஜீயர் சுவாமிகளின் 568 வது திருநட்சத்திர உற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவு நாளான இன்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆசனத்தில் இருந்து புறப்பாடாகி, பெரிய கோபுரம் வரை சென்று, ஜீயர் மடத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சேவை சாற்றுமறை உபன்யாசம், பெரிய சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.