உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையை, சிவனாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. தை மாத பவுர்ணமி 27 ம் தேதி அதிகாலை, 1:45 மணிமுதல், 29ம் தேதி அதிகாலை, 1:35 மணி வரை உள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவண்ணாமலையில், 11வது மாதமாக, கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !