பழநியில் 312 நாட்களுக்கு பின் தங்கரதப் புறப்பாடு
ADDED :1756 days ago
பழநி : பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 312 நாட்களுக்கு பின் நேற்று தங்கரதப் புறப்பாடு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச விழா ஜன.22 ல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனாவால் மார்ச் 20 முதல் தங்கரதப் புறப்பாட்டிற்கு அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு 312 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு நாள் மட்டும் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோயில் அலுவலர்களால் தங்கரதப் புறப்பாடு நடந்தது. இதில் பக்தர்கள் தேர் இழுக்க அனுமதியில்லை. இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பின் தங்கரத புறப்பாட்டை பார்த்ததில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.